கோவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் உரிய நேரத்தில் முடக்கப்படாமையால் இன்று ஆபத்து எல்லைமீறிவிட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டை முடக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.