பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கத்திற்கு பிரதமரால் மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் பிரதமரின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் முன்மொழியப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான விசேட அதிகாரியாக கீதனாத்தின் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த அதிகாரியின் கீழ் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பான அதிகாரங்கள் உள்ளடக்கப்படும் எனப் பிரதம அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.