கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர் தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான காலத்தை குறைத்துக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.