மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்களை வழி மறித்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரியூட்டிய சம்பவம் ஒன்று யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி அல்வாய் சிறிலங்கா பாடசாலைக்கு அருகாமையிலேயே நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த அச்சுவேலியை சேர்ந்த இரு இளைஞர்களும் தப்பியோடியுள்ளனர். அதனையடுத்து பருத்தித்துறை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரவித்துள்ளனர்.