மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி, மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகியுள்ளன.

அனர்த்தம் இடம்பெற்றபோது இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ள போதும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தையடுத்து குறித்த இல்லத்தில் உள்ள சிறுமிகள், பாடசாலை மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இடி மின்னல் தாக்கத்தினால் இல்லத்தில் ஏற்பட்ட தீ அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை மின்சாரசபைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சாரசபையினர் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர்.