குழந்தைப் பேற்றிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பார் ஒழுங்கை, தெல்லிப்பளையைச் சேர்ந்த ஜுவசுமன் மேரி சலுயா, என்னும் 29 வயதையுடைய தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இரண்டாவது குழந்தைப் பேறு காலத்தில் இதய சிகிச்சை பெற்று வந்த இந்த தாயார் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்து சிறிது நேரத்தில் இதய நோயால் பெரும் சிரமப்பட்டுள்ளார்.

இதனால் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். இவ்வாறு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, 2 மணி நேரம் வைத்தியர்களின் பெரும் முயற்சி பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இருப்பினும் குழந்தை சுகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.