இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குருநகர் பிரதேசத்தில் தங்கியிருந்த பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் நபர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வந்த குறித்த குடும்பத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.