கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த தினம் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு தொற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தொற்றாளர்கள் அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளனர்.