பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் எவையும் வெளிகாட்டப்படாத நோயாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் விசேட மருத்துவ குழாமினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவர்.

ஏதேனும் சிக்கலான நிலைமைகள் ஏற்படின் உடனடியாக குறித்த தொற்றாளரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.