தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, அப்பெண்ணை ஏமாற்ற முயன்ற திருமணமான நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் இருக்கும் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு விகனேஷ் என்ற 26 வயதில் மகன் உள்ளார். விக்னேஷிக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷ், பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய போது, அவருடன் பணியாற்றிய நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடியைச் சேர்ந்த செல்வம் மகள் சபீனா(23) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இப்போது சபீனா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் மயிலாடுதுறையில் இருக்கும் விக்னேஷை சந்தித்த அவர், தான் கர்ப்பமாக இருப்பதால், திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவைக் கலைக்க சொல்லி சபீனாவை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சபீனா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், விக்னேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.