வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும் விவாகரத்து, திருமணத்தை இரத்து செய்தல் மற்றும் நீதித்துறை ஊடாக பிரித்தல் ஆகியவற்றை அனுமதிப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள நீதி அமைச்சு தயாராகியுள்ளது.

அதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படக்கூடிய ஒரு சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை சட்டமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கையில் திருமணம் செய்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அந்த நாடுகளில் திருமண வழக்கு தாக்கல் செய்து பெறும் தீர்மானம் இலங்கையில் இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் உரிய தரப்பினர் கடுமையான நெருக்கடி நிலைக்கு முகம் கொடுக்கின்றனர்.

இலங்கையினுள் அவ்வாறான தீர்மானத்திற்கமைய செயற்படுவதற்கு, அவர்கள் மீண்டும் இலங்கையில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக வெளிநாட்டு விவாகரத்தை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.