வவுனியாவில் 6 மாத குழந்தை ஒன்று கொரோனாதொற்றிற்கு பலியாகியுள்ளது.

குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.