கோவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறக்கவே அரசாங்கம் ஆராய்ந்து வருகிறதாக தெரியவருகிறது.

சுகாதார வழிமுறைகளை கடுமையாக்கி கட்டுப்பாடுகளுடன் நாட்டை மீள திறக்கவும், அதேபோல் அத்தியாவசிய மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தும் விடயங்களுக்கு மாத்திரம் அனுமதியை வழங்கி நாட்டை திறக்கலாம் என்பதே சுகாதாரத்துறை அமைச்சர், கோவிட் கட்டுப்பாட்டு பிரதானி, சுகாதார பணியகம் மற்றும் ஆளுந் தரப்பின் பெரும்பான்மையினரின் நிலைப்பாடாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து முடிவை எடுப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று கூடும் கோவிட் செயலணிக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரியவருகிறது.