மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள, ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி ஒருவர் நேற்றிரவு பொலிஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார். 

இதன்போது 30 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து யுவதி இருந்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். 

இதன்போதே யுவதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்கேதநபரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.