வவுனியா, உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று பொலிசாரால் முற்றுகையிப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, செட்டிகுளம் பகுதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ன வீரக்கோன் அவர்கள் தலைமையில், உலுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படும் நான்கு பெரல்கள், 100 லீற்றர் கோடா, வயர்கள் என்பனவும் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிசார் மேலும்  தெரிவித்துள்ளனர்.