வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக முச்சக்கரவண்டியினை இராணுவ பேரூந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக இன்று (13.09.2021) சற்றுமுன் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியுடாக பயணித்த இராணுவ பேரூந்து கொக்குவெளி இராணுவ முகாமிற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இடம்பெற்ற உடனே இவ்விடத்திலிருந்த இரானுவத்தினர் விபத்துக்குள்ளான பேரூந்தினை இராணுவ முகாமிற்குள் எடுத்துச்சென்றதுடன் முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் விட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.