இலங்கையில் இளம் பெண் மருத்துவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தள்ளார்.

இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ஆம் திகதி இவர் தொற்றுக்கு இலக்காகி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 02ஆம் திகதி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.