அரிசி மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச நிர்ணய விலை நீக்கப்பட்டதன் பின்னர், அரிசி விலை குறித்த அறிவிப்பை ஆலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன அரிசி விலையை வெளியிட்டார்.

ஒரு கிலோகிராம் நாட்டரிசி                  :  115 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி            :  140 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி   : 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.