யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியிலுள்ள வீட்டில், மது போதையில் இளைஞரொருவர் தாய் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் பிரிவு மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது அவர் வீட்டில் இருந்த வாள் மூலம் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தேகநபரை மடக்கி பிடித்து வாளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.