கோவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் போதே சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free) கொள்வனவுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் (முழுமையாக தடுப்பூசி பெற்ற) சுகாதார அலுவலகத்தினால் தடுப்பூசி சான்றிதழில், அனுமதி பொறிக்கப்பட்ட பயணிகளுக்கு சுங்கத் தீர்வை இல்லாத கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கொள்வனவுகளை பயணிகள் வேறொரு நாளில் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.