பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று (14) ரிஷாட் பதியுதீன் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.