சதொச நிறுவனத்தால், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொதிகள் வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சதொச நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உதவித்தொகையாக 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியிலேயே. இதுவரை தலா  2,000 ரூபாய் மாதாந்த சத்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், நிதி பற்றாக்குறையால், இத்திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் வினவுவதற்கு, மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.