ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் (ஈபிஆர்எல்எப்) வவுனியா நகரசபை உறுப்பினர் இராஜாங்க அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்பகல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி.சில்வா அவர்களின் வவுனியா மாவட்ட மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சுமூகபாதுகாப்பு இணைப்பாளராக வவுனியா நகரசபையின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனமானது, இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நியமனத் தொடர்பில் சமந்தா செபநேசராணி அவர்களிடம் கேட்ட போது, குறித்த  நியமனம் பெண்கள், சிறுவர்களுக்கு பணியாற்றுவதற்காக எனக்கு இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது. நான் கட்சி தாவ வில்லை. தற்போதும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) உறுப்பினராகவே வவுனியா நகரசபையில் தொடர்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் முதலமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் கூட்டனிக் கட்சிகளில் ஈபிஆர்எல்எப் பிராதான கட்சியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.