வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பகுதியில் டிப்பர் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் இன்று (18.10) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

மதவாச்சி – மன்னார் பிராதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.