வெல்லவாய – எல்லவெல ஆற்றில் இன்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் தந்தை (38), மகன் (15) மற்றும் மகள் (11) அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.