யாழ்.தெல்லிப்பழை பகுதியில்  அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீத தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 ஹையஸ் ரக வாகனத்தில் வந்தவர்களால் சினிமா பாணியில் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் தெரியவருவதாவது இந்தச் சம்பவம் நேற்று (06) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

மேலும்,தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.