யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கோவிட் – 19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மாநகரசபை ஆணையாளருக்கு கோவிட் 19 நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந் நிலையில் அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் பி.சிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனனர்.