வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் (Kamaladasan) வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 01.03.2022 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வவுனியா பிரதேச செயலாளராக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் (S.Sudarshan) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் கீழே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.