வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாஇ சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச் சென்றிருந்த நிலையில் 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்த நிலையில் நேற்று (24.11) மாலை வவுனினியா வைத்தியசாலையில் அவரது உடலம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுவனின் உடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று (24.11) வெளியாகிய நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த உடலத்தை அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.