கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும், நடமாடும சேவைமூலம் மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளாா்.

வைத்தியசாலைகளுக்கு கிலினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், குறித்த சிகிச்சை நிலையத்திலேயே மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.