முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை ஊடகவியலாளர் புகைப்படம் எடுத்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.