ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினத்தினை இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களமும் வவுனியா குட்சைட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானமும் இணைந்து நடாத்திருந்தனர்.

குறித்த நிகழ்வு ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மண்படத்தில் இன்று (27.11) காலை ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு நா.பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

olom

வவுனியா மாவட்ட அந்தன ஒன்றிய தலைவர் முத்து ஜெயந்திநாத குருக்கள் முன்னிலையில் வவுனியா தேசியக்கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் அருந்ததி இரவீந்திரன் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி வரவேற்புரையினை வவுனியா நகரம் மற்றும் வடக்கு இந்து காலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா நடாத்தியதுடன் தலைமையுரையினை ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு நா.பிரபாகரக்குருக்கள் நடாத்தியிருந்தார். அத்துடன் சிறப்புரைகளை தமிழ்மணி அகளங்கன் மற்றும் வவுனியா செட்டிக்குளம் இந்து காலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் நடாத்திருந்தனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சு , நடனம் என்பனவும் இடம்பெற்றிருந்ததுடன் நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்கள் , ஆலய குருக்கள்கள் , சமய ஆர்வளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.