மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முக நூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டதாகத் தெரிவித்துக் குறித்த நபர் இன்றைய தினம்(27) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.