மாவீரர் நினைவேந்தல் மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட  இளைஞர் ஒருவர் விசேட அதிரடி படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த இளைஞரே இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சட்டத்தரணி டினேஸன் குறித்த நபர் சார்பாக மன்னார் காவல் நிலையத்தில் முன்னிலையாகிய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனை தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   

அதே நேரம் குறித்த முகநூல் பதிவு தொடர்பாகவும் சம்பவம் தொடர்பாகவும் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.