வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உத்தியோகத்தருடன் நெருங்கி பழகிய உத்தியோகத்தருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில்  மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கோவிட் தொற்றுக்குள்ளான மூவரும் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.